உச்சி மாநாடு 2026 மூலம் கிடைத்த பெரும் முதலீட்டு வாய்ப்புகளை விரைவாக செயல்படுத்த சுற்றுலா செயல்முறை மையம் அமைப்பு!

 

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு உலக சுற்றுலா உச்சி மாநாடு 2026 மூலம் கிடைத்த பெரும் முதலீட்டு வாய்ப்புகளை விரைவாக செயல்படுத்தவும், முதலீட்டாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கவும் சுற்றுலா செயல்முறை மையம்(Tourism Facilitation Cell) அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா செயல்முறை மையம் (Tourism Facilitation Cell) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023-ன் முக்கிய நோக்கம், மாநிலத்தில் தனியார் முதலீடுகளை ஊக்குவித்து சுற்றுலாத்துறையை விரைவாக வளர்ச்சியடையச் செய்வதாகும்.

வெற்றிகரமாக நடைபெற்ற தமிழ்நாடு உலக சுற்றுலா உச்சி மாநாடு 2026 மூலம் மாநிலத்திற்கு ரூபாய் 22,795 கோடி மதிப்பிலான முதலீடுகளை உள்ளடக்கிய 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக முதலீட்டாளர்களுக்கு விரைவான சேவைகளை வழங்குவதில் சுற்றுலா செயல்முறை மையம் (Tourism Facilitation Cell) மிக முக்கிய பங்காற்றும். இந்த சுற்றுலா செயல்முறை மையம் சுற்றுலா ஆணையர் அவர்களின் தலைமையில் கீழ்க்கண்ட அலுவலர்களுடன் செயல்படும்;

1.இணை இயக்குநர், சுற்றுலாத் துறை,
2.பொது மேலாளர், தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம்,
3.உதவி சுற்றுலா அலுவலர் நிலை -2
4.தமிழ்நாடு வழிகாட்டுதல் நிறுவனத்தின் உறுப்பினர்.

ஒருங்கிணைந்த ஒற்றை சாளர அனுமதி (Single Window Clearance) தமிழ்நாடு அரசின் நிறுவனமான Guidance Tamil Nadu மூலம் செயல்படும் Single Window Portal, தனியார் திட்டங்களுக்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கான வசதியை வழங்கும்.

இந்த வசதி மூலம்:

•தேவையான ஆதார ஆவணங்களை ஒரே தளத்தில் சமர்ப்பிக்கலாம்.

•விண்ணப்பதாரர் மற்றும் அதிகாரிகள் இடையிலான தகவல் பரிமாற்றம் எளிதாக்கப்படும்.

•விண்ணப்பத்தின் நிலையை கண்காணிக்க முடியும்.

•காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட முறையில் அனுமதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்யப்படும்.
சுற்றுலா வசதி ஒருங்கிணைப்பு மையம் (Tourism Facilitation Cell)

•Guidance Tamil Nadu மாநில அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமாக செயல்படுகிறது. முதலீட்டாளர்களுக்கு உதவுவதற்காக Biz Buddy உதவி மையமும் இயங்கி வருகிறது.

•இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், சுற்றுலாத்துறை துறையின் கீழ் Tourism Facilitation Cell அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் கீழ்க்கண்ட பணிகளை மேற்கொள்ளும்:

•சுற்றுலாத்துறையில் புதிய முதலீடுகளை ஈர்த்தல்.

•மாநிலத்தில் நடைபெற்று வரும் தனியார் / PPP திட்டங்களின் கண்காணிப்பு மற்றும் மதிப்பாய்வு.

•புதிய சந்தைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க தேவையான சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அடையாளம் காணுதல்.

•தனியார் முதலீட்டாளர்களுக்கு தேவையான அனுமதிகளைப் பெற வழிகாட்டுதல் மற்றும் அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைப்பு.

•மாநில சுற்றுலா வளர்ச்சியைப் பற்றிய காலாண்டு அறிக்கைகளை வெளியிடுதல். தமிழ்நாடு உலக சுற்றுலா உச்சி மாநாடு 2026 மூலம் கிடைத்த பெரும் முதலீட்டு வாய்ப்புகளை விரைவாக செயல்படுத்தவும், முதலீட்டாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கவும் Tourism Facilitation Cell முக்கிய செயல்முறையாக செயல்படும்.

 

Related Stories: