கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு

போச்சம்பள்ளி, பிப்.5: தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் ஆண்களுக்கான மாநில ஜூனியர் கபடி போட்டி வரும் 19ம் தேதி முதல் 21 தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட அமெச்சூர் கபடி கழக மாவட்ட அணி தேர்வு செய்யப்பட உள்ளது.

இந்த வாய்ப்பினை கிருஷ்ணகிரி மாவட்ட கபடி வீரர்களும் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கான தேர்வுபோட்டி வரும் 6ம் தேதி காலை 9 மணி அளவில் சூளகிரி இரணமுனீஸ்வரர் கோவில் மைதானத்தில் நடக்கிறது. போட்டியில் கலந்து கொள்வோர் 20 வயதுக்குள் 70 கிலோ எடைக்கு மிகாமல் இருக்க வேண்டும். பாஸ்போட் அளவு 2 புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களுக்கான அடையாள அட்டை கட்டணம் ₹300 செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: