சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களை சந்தித்து பேசியதாவது: 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை 1 லட்சத்து 22 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று குறிப்பிட்ட நிலையில் திருத்திய மதிப்பீட்டில் கண்டிப்பாக இது உயரும். 2026-27ல் 1 லட்சத்து 22 ஆயிரம் கோடி பற்றாக்குறை என்று சொல்கிறார்கள். திருத்தி அமைக்கும்போது இது இன்னும் உயரும்.
இவ்வாறு பற்றாக்குறை உயர்ந்துகொண்டே சென்றால் அதை ஈடுசெய்ய மக்களின் வரிச்சுமை மற்றும் கடன் வாங்கும் அளவு கூடும். கறிக்கோழி விவசாயிகள் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தேன். அப்படி இருந்தும் இந்த அரசு, கறிக்கோழி வளர்க்கின்ற விவசாயிகளுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி இணைந்து வலுவான கூட்டணி அமைத்து இருக்கிறோம். எங்கள் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
