×

திருச்சியில் புகையிலை விற்ற வாலிபர் கைது

திருச்சி, பிப். 14: திருச்சியில் புகையிலை விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி, பொன்மலை, மேலகல்கண்டார் கோட்டை அருகே புகையிலை விற்பனை நடப்பதாக நேற்று முன்தினம் பொன்மலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைதொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தி புகையிலை விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ஆல்வின் (25) என்ற வாலிபரை கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவித்தனர். அவரிடம் இருந்து 60 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags : Trichy ,Ponmalai police ,Melakalkandar Fort ,Ponmalai, Trichy… ,
× RELATED திருச்சி அரசு மருத்துவமனையில் மனநோயாளி தற்கொலை