×

புளியம்பட்டி கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

துறையூர், பிப். 13:திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையம் ஊராட்சியில் உள்ள புளியம்பட்டி கிராமத்தில் கடந்த பல வருடங்களாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த ரேஷன் கடைக்கு சொந்தமாக கட்டிடம் வேண்டி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்டி அதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின்குமார் தலைமை வகித்து புதிய ரேஷன் கடையை பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.இதில் மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவர் தர்மன் ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், கூட்டுறவு துணை சார்பதிவாளர் சங்கர், வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி, செயலாளர் சுந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Puliyampatti village ,Thuraiyur ,Puliyampatti ,Muthaiyampalayam ,Trichy district ,Thuraiyur… ,
× RELATED திருச்சி அரசு மருத்துவமனையில் மனநோயாளி தற்கொலை