×

பாஜ தலைவரின் அநாகரிக அரசியல்: எஸ்டிபிஐ கண்டனம்

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மகளிரணியான விம் மாநில தலைவர் பாத்திமா கனி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்வைத்த மிகக் கேவலமான தனிநபர் விமர்சனங்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. ஒரு தலைவரின் அரசியல் நிலைப்பாடுகள் அல்லது அவர் முன்வைக்கும் திட்டங்களில் உள்ள குறைகளை கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வதே ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம்.

அதற்கு மாறாக, எவ்வித சம்பந்தமுமின்றி ஒரு பெண்ணின் பெயரை இழுத்து, பொதுவெளியில் கொச்சைப்படுத்துவது அரசியல் முதிர்ச்சியின்மையின் உச்சமாகும். திராவிட மண்ணில் கண்ணியமான அரசியல் என்பது ஒரு நீண்டகால மரபு. அந்த மரபைச் சிதைத்து, தனிமனித ஒழுக்கம் குறித்து அவதூறு பரப்புவது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல. இத்தகைய கீழ்த்தரமான அரசியல்வாதிகளை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : BJP ,STBI ,Chennai ,president ,VIM ,STBI party ,Fathima Kani ,Nainar Nagendran ,Tamil Nadu ,Victory Party ,Vijay ,
× RELATED பிரிவினைச் சக்திகளுக்கு ஒருபோதும்...