×

நிச்சயமானதை மறைத்து டேட்டிங்கிற்கு அழைத்த நடிகர்: நடிகை மம்தா மோகன்தாஸ் பகீர் குற்றச்சாட்டு

சென்னை: தனக்கு நிச்சயமானதை மறைத்து, பிரபல மலையாள நடிகர் ஒருவர் தன்னை டேட்டிங்கிற்கு அழைத்ததாக நடிகை மம்தா மோகன்தாஸ் பகீர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:
எனக்கு டேட்டிங் மற்றும் காதலில் பெரிய அளவில் அனுபவம் இல்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்பு, ஒரு பெண்ணாக என்னுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய நினைத்தேன். அந்த நேரத்தில் பிரபலமான மலையாள நடிகர் ஒருவர் என்னை டேட்டிங்கிற்கு அழைத்தார். அதற்கு எனது அம்மாவின் அனுமதியும் கிடைத்தது. அப்போது அந்த நடிகருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. அந்த உண்மை தெரிந்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். அதற்கு பிறகு மற்றொருவரை சந்தித்தேன். ஆனால், இதெல்லாம் தேவையில்லாத வேலை என்பதை பிறகு உணர்ந்தேன்.

நானும், எனது கணவர் பிரஜித் பத்மநாபனும் அவரது சகோதரி திருமணத்தில் சந்தித்தோம். ஒருவருக்கு ஒருவர் என்னென்ன பிடிக்கும் என்பது பற்றி பேசினோம். பிறகு அவர் என்னிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். எல்லாமே மிகவும் சிம்பிளாக நடந்து முடிந்தது. என்னை பொறுத்தவரை, திருமணம் என்பது வாழ்நாள் ஒப்பந்தம்.

திருமணம் முடிந்து 6 மாதங்கள் கழித்து நான் அதிலிருந்து வெளியேறிவிட்டேன். அது மிகவும் கடினமான ஒரு முடிவு. நான் எனது உடல்நிலையுடன் கடுமையாக போராடிக் கொண்டிருந்தேன். எனது அம்மாவுக்கும் அந்த கவலை இருந்தது. திருமணம் என்பது இருதரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பதுதான். நான் இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்திருக்கிறேன். தற்போது நடிக்கிறேன், பாடி வருகிறேன்.

Tags : Mamta Mohandas Bagir ,Chennai ,
× RELATED பிரிவினைச் சக்திகளுக்கு ஒருபோதும்...