×

சிறுபான்மையினர் முன்னேற்றம் சிறந்திட திமுக கூட்டணிக்கு சிந்தாமல் சிதறாமல் வாக்களிக்க வேண்டும்: சென்னையில் நடந்த மமக பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை: சிறுபான்மையினர் முன்னேற்றம் சிறந்திட திமுக கூட்டணிக்கு சிந்தாமல் சிதறாமல் வாக்களிக்க வேண்டும் என்று சென்னையில் நடந்த மமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஓய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது. கூட்டத்ததிற்கு கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார். பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் ப.அப்துல்சமது எம்எல்ஏ, பொருளாளர் கோவை உமர், தமுமுக பொருளாளர் சபியுல்லாகான், துணைத்தலைவர் பி.எஸ்.ஹமீது, மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் தாம்பரம் யாகூப், தஞ்சை பாதுஷா, மைதீன் சேட்கான், சலீமுல்லா கான், தலைமை நிலைய செயலாளர் ஐ.அமீன் அஹமத், மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் புழல் எஸ்.ஏ.ஷேக்முகமது அலி உள்ளிட்ட பொதுக்குழு நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பொதுக்குழுவில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலம் ஆக்கி, ஒன்றிய பாஜக அரசின் ஓயாத இடையூறுகளைக் கடந்து, ஓங்கி நிற்கும் திமுக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் இப்பொதுக்குழு மனமார பாராட்டுகிறது. இந்த ஆட்சி தொடர்ந்திட, தமிழ்நாடு மென்மேலும் வளர்ந்திட, சமூக நல்லிணக்கம் மலர்ந்திட, சமூகநீதி கோட்பாடுகள் ஓங்கி ஒளிர்ந்திட, சிறுபான்மையினர் முன்னேற்றம் சிறந்திட திமுக கூட்டணிக்கு சிந்தாமல் சிதறாமல் வாக்களித்து, வரும் சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றியை திமுக கூட்டணி பெறுவதற்கு முதன்மை காரணமாக நமது களப்பணிகள் அமைந்திட வேண்டும். அதிமுக நடத்திய பத்தாண்டு கால பாஜகவின் பினாமி ஆட்சியில் மிகப்பெரிய சேதங்களை முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு சந்தித்துள்ளது. 2007ம் ஆண்டுக்குப் பிறகு நிரப்பப்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பணியிடங்களிலும் கல்வி நிலைய சேர்க்கைகளிலும் முஸ்லிம்களுக்கான 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளதா? என அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 5 விழுக்கடாக உயர்த்த உரிய சமூக நீதி கிடைத்திட ஆவன செய்ய வேண்டும். பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய செய்ய வேண்டும். ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைக்கும் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வு முறையை ஒழிக்க வேண்டும். புதிய கல்வி கொள்கையை ஒன்றிய அரசு முற்றிலும் கைவிட வேண்டும். தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு முழு நேர முதன்மை செயல் அலுவலரை நியமிக்கப்பட வேண்டும் உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : DMK ,MMA ,meeting ,Chennai ,DMK alliance ,Humanity People's Party ,OYMCA ,Royapettah, Chennai ,
× RELATED பிரிவினைச் சக்திகளுக்கு ஒருபோதும்...