சென்னை: இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். “தமிழ்நாட்டில் சுமார் 89,000 இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் வசிப்பவர்களில் சுமார் 40% பேர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள். தமிழ்நாட்டில் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்ந்துவரும் போதிலும், குடியுரிமை தற்போது வரை கிடைக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை [அ] நீண்டகால விசா போன்ற சட்டப்பூர்வ தீர்வு கிடைக்கவில்லை. ’40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை உள்ளிட்ட நிரந்தர தீர்வு தேவை” என முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார்.
