×

மகளிருக்கு ரூ.5 ஆயிரம் திருமாவளவன் வரவேற்பு

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் எம்பி வெளியிட்ட அறிக்கை: திமுக அரசு ஏறத்தாழ ஒன்றரை கோடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை நிறுத்துவதற்கு பாஜ அதிமுக கூட்டணியினர் சதி செய்துள்ளனர். இதை அறிந்த முதல்வர் பிப்ரவரி மார்ச் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கும் முன்பணமாக ரூ.3000, கோடை காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை எதிர்கொள்வதற்காக ரூ.2000 உதவித்தொகையும் சேர்த்து ஐந்தாயிரம் ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட்டுள்ளார். இது யாரும் எதிர்பாராத ஒரு அறிவிப்பாகும். திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெற்று வரும் பெண்கள் ‘மீண்டும் திமுகவைத் தான் ஆட்சியில் அமத்துவோம் என்று உறுதி எடுத்து இருக்கிறார்கள். இந்த அறிவிப்பு அவர்களுக்கெல்லாம் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது.

Tags : Thirumaalavan ,Chennai ,Vice President ,Thirumavalavan ,Dimuka government ,
× RELATED எடப்பாடி சாதித்தாரா இல்லையா என்பது...