திருப்பூர்: சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகத்தில் கோஷ்டி பூசல் நிலவுகிறது. குறிப்பாக திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் பாலமுருகன் ஒரு பக்கமும், துணைச் செயலாளர் குத்புதீன் மறுபக்கமும் என தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இருக்கிறதே கொஞ்சம் பேர், அதிலும் இப்பவே கோஷ்டி பூசலா என விஜய் ரசிகர்கள் அங்கலாய்க்கின்றனர்.
