அப்பா-பையன் அடிச்சிட்டிருப்பதற்கு நாம பலிகடா ஆகணுமா? கட்சிக்கு உயிர கொடுத்த காடுவெட்டி குரு உயிர எடுத்திட்டிங்க; பாஜவோட கூட்டணி வச்சுட்டு எப்டி போயி ஓட்டு கேட்குறது? தொண்டர்கள் ஆடியோ வைரல்

பாமகவில் தந்தை, மகன் மோதலால் கட்சி உடைந்து 2 ஆக உள்ள நிலையில் அக்கட்சியில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாக புலம்பி வருகின்றனர். இதனிடையே தந்தை, மகன் மோதலால் விரக்தியில் உள்ள கட்சி தொண்டர்கள் 2 பேர் உரையாடுவதாக சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த ஆடியோ விவரம் வருமாறு:
சீனியர்: தம்பி எங்கடா இருக்கிற, சங்கத்து கூட்டத்திற்கு கூப்பிடராங்கடா.
ஜூனியர்: வீட்டில் இருக்கிறேன், நான் வரலனா
சீனியர்: என்ன பிரச்னை, ஏன் வரவில்லை
ஜூனியர்:எனக்கு ஒன்றுமில்லை, நான் நல்லாதான் இருக்கிறேன்.
சீனியர்: நம்ம தொகுதியில் போடுறாங்க, எல்லோரையும் கூட்டிட்டுவர சொல்லியிருக்கிறாங்க. போன கூட்டத்திற்கு வரும்போதுகூட நல்லாதான் கவனிச்சி அனுப்பினாங்க. சும்மா படுத்துட்டிருப்பதற்கு போனா 10 ரூபாய் கிடைக்கும்.
ஜூனியர்: எனக்கு வரபிடிக்கல. அங்க நடக்கிறது சரியில்லை. எல்லா நேரமும் காசுக்கே வேலை பார்ப்பார்களா. சின்னஅய்யாவும், பெரியஅய்யாவும் அடிச்சிட்டிருக்கிறதற்கு நாம் பலிகடா ஆக வேண்டுமா.
சீனியர்:அது அவங்க குடும்ப பிரச்னைடா.
ஜூனியர்:குடும்பமுனா அது அவங்க குடும்பத்தோடு இருக்க வேண்டும்.
சீனியர்: எங்களுக்கே பெரிய வருத்தம் இருக்கிறது. பெரியவரு கட்சியில் உழைச்சவங்களுக்கு போஸ்டிங் போட்டாரு.
ஜூனியர்:எங்க போட்டாங்க, உண்மையா உழைச்சவங்களை எல்லாம் தூக்கி வெளியே போட்டுட்டாங்க.
சீனியர்: எல்லோருக்கும் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. சாதி முக்கியம். நம்ம ஆளுங்க முக்கியம். படிச்ச பசங்களே இப்படி பண்ணலாமா.
ஜூனியர்: நம்ம ஆளுங்க முக்கியமுன்னா நமக்கு எதுவுமே பன்னல. பாஜவுடன் கூட்டணி பேசிட்டு, போயிட்டிருக்காங்க. அவங்ககூட போய் நாம் ஓட்டு கேட்கமுடியுமா.
சீனியர்: எங்களுக்கும் தெரியுது, அவன் தெருவுல நின்றால் ஒருத்தன்கூட ஓட்டுபோட மாட்டான்.
ஜூனியர்: நம்ப பிள்ளைகளுக்கு செய்யனும் யோசிக்கிறவரு நல்லது செய்யுனுமா வேண்டாமா?. ஜி.கே.மணி என்ன சொன்னாரு திமுகவுடன் கூட்டணி என்று சொன்னார். அதிலியாச்சும் போயிருக்கலாம். இவங்க முந்திக்கிட்டாங்க.
முன்னாடியே முடிவு எடுத்திருக்கணும்.
சீனியர்: இவனுங்க எங்கடா குடும்ப சண்டையிலேதான் கவனம் செலுத்துறானுங்க. கட்சிக்காரங்க எங்க போறோம், என்ன பண்றோம் என்று யோசிக்கமாட்டறாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கிறது.
ஜூனியர்:எவன் காசுதரான், அதிகமாக எவன் காசு தருகிறான் அங்கதான் போய் நிற்கிறாங்க. இவங்க ஏதாவது ஒருமுடிவு எடுக்கனும். திருச்சியில விசிகவுக்கு கூடிய கூட்டம் நமக்கு சேருமா அப்படி. இன்னைக்கு பாமக காரன் எல்லோரிடமும் கையை கட்டி நிற்க வேண்டிய நிலைதான் இருக்கிறது. காடுவெட்டியார் இருக்கும்வரை கட்சி நல்லாயிருந்தது. கட்சிக்கு உயிரை கொடுத்த அவரையே உயிர எடுத்திட்டிங்க. இப்ப நமக்கும், நம்முடைய பிள்ளைகளுக்கும் பண்ணுவாங்கன்னு நம்பிட்டு உட்கார்ந்திருங்க…
சீனியர்: காடுவெட்டி குரு இருந்தவரைக்கும் எல்லாம் பண்ணாரு, சங்கம் எப்படியிருந்தது தெரியும். சரி வாடா ஏதாவது பொறுப்பு போடுவாங்க. கட்சி கூட்டத்துக்கு வந்தாதாண்டா மதிப்பாங்க.
ஜூனியர்:என்னை மதிக்கவே தேவையில்லை, நான் வரல. இவ்வாறு இருவரும் உரையாடுவது போன்று அன்புமணி, ராமதாஸ் பரிதாபங்கள் என்ற ஆடியோ தற்போது சமூக வலைளத்தில் வைரலாகி வருகின்றன. ஆனால் இதன் உண்மைத்தன்மை குறித்து பாமக வட்டாரத்தில் விசாரித்தபோது, இது மிமிக்ரி செய்யப்பட்ட ஆடியோ என மறுத்தனர்.

Related Stories: