சேலம் விஜய் கூட்டத்தில் பங்கேற்றவர் உயிரிழப்பு முதலில் உங்கள் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் நேசியுங்கள் விஜய்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சென்னை: சேலத்தில் விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் பங்கேற்றவர் உயிரிழந்த நிலையில் முதலில் உங்கள் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் நேசியுங்கள் விஜய் என சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்துகொள்ள 4998 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு க்யூஆர் கோடுடன் கூடிய அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள நிர்வாகிகள் காலை முதலே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கூடத்தொடங்கினர்.

இந்நிலையில் காலை 10.30 மணிக்குச் சென்னையில் இருந்து புறப்பட்ட விஜய் தனிவிமானம் மூலம் சேலம் சென்று கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பின்னர், நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு போன வேகத்தில் சென்னை திரும்பினார். கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் மூன்று மணிநேரம் வரை வெயிலில் காத்திருந்தனர். அவர்களுக்கு உட்காரக்கூட நாற்காலி போடவில்லை. அதனால் விஜய் பேசும்போதே வெயிலின் தாக்கத்தால் பலர் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. கூட்டத்தில் கலந்துகொண்ட சுராஜ் என்ற வடமாநில தொழிலாளி ஒருவர் வெயிலின் தாக்கம் மற்றும் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக தவெக நிர்வாகியிடம் கேள்வியெழுப்பச் சென்ற செய்தியாளர்களிடம் தவெகவினர் வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும், தவெகவினர் தங்களின் வாகனத்தைக் கொண்டு செய்தியாளர்கள் மீது இடிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இறுதியில் தவெக நிர்வாகிகள் யாருமே இது தொடர்பாக பதிலளிக்காமல் சென்றுள்ளனர். கூட்டத்தில் பேசிய விஜய், ‘‘விஜய் வீட்டை விட்டு வெளியே வா எனச் சொல்பவர்களுக்கு எனது வீடு எது, எங்குள்ளது என தெரியுமா? இந்த தமிழ்நாடுதான் எனது வீடு, எனது வீட்டில் 8 கோடி பேர் உள்ளார்கள், அனைவரும் எனது சொந்தம்’’ என்று கூறினார். தேர்தல் வந்துவிட்ட பிறகும் கூட ஒரு அரசியல் கட்சியின் தலைவர் எப்போது வெளியில் வருவார் என்ற கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், ஏதேதோ உளறிக்கொண்டிருக்கிறார் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய விஜய்யின் பேச்சில் வழக்கம் போல அபத்தமும் திமுக மீதான வன்மமும் மட்டுமே இருந்தது. கட்சி ஆரம்பித்த எம்ஜிஆரையும் கட்சியை வளர்த்த ஜெயலலிதாவையும் அவர்கள் சொல்லியதையும் மறந்துவிட்டு நமக்கு அனுபவம் இல்லை என்று சொல்கிறார்கள் என அதிமுகவை மறைமுகமாக விமர்சித்தார். மேலும், ‘‘மக்களை நேசிக்கும் குணம் இருந்தால் போதும்; நல்ல ஆட்சி கொடுக்கலாம்’’ எனக் கூறிய விஜய், முதலில் தனது கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் அவர்களின் உயிரையும் நேசித்து, அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொடுத்து, நல்ல தலைவனாக இருக்க முயற்சி செய்யுங்கள் விஜய் எனச் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

* 2 ஆண்டுகளாகத்தான் மாணவர்கள் கண்ணுக்கு தெரிகிறதா? நடிகர் விஜய்க்கு சமூக ஆர்வலர்கள் கேள்வி
முதல்வர் மு.க.ஸ்டாலின் 1.31 கோடி மக்களுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என 3 மாதத்திற்கு தலா ஆயிரம் வீதம் 3 ஆயிரம், கோடை காலத்தை சமாளிக்க ரூ.2 ஆயிரம் என ரூ.5 ஆயிரத்தை பெண்களின் வங்கிக் கணக்கில் நேற்று செலுத்தியிருந்தார். இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆடிப்போய்விட்டன. இது குறித்து நடிகர் விஜய் பேசும்போது, ‘இந்த ஆண்டுதான் கோடைகாலம் வருகிறதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் பதில் அளித்திருந்தனர். அதில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக மட்டும் விஜய் பரிசளிப்பது ஏன்? அதற்கு முன்பெல்லாம் யாரும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் சாதனை படைக்கவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: