×

பொதட்டூர்பேட்டை அருகே சேதமான நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் தீவிரம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பொதட்டூர்பேட்டையில் இருந்து திருத்தணி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நாள்தோறும் அரசு பேருந்து உள்பட ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகள் குண்டும் குழியுமாக சேதமடைந்திருந்தன. ஆங்காங்கே உள்ள மேடுபள்ளங்களால் பல்வேறு வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதில் இருசக்கர வாகன ஓட்டிகளில் பலர் பள்ளங்களில் நிலைதடுமாறி விழுவதுடன் காயமடைந்து வந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின் பேரில், நேற்று முதல் பொதட்டூர்பேட்டை-திருத்தணி மாநில நெடுஞ்சாலையில் சேதமான பகுதிகள் அனைத்தும் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிற்றரசு மேற்பார்வையில், பள்ளிப்பட்டு உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி பொறியாளர் நரசிம்மன் ஆகியோர் முன்னிலையில் நேற்று முதல் மாநில நெடுஞ்சாலையில் சேதமான பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக அப்பகுதி வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

முதல்கட்டமாக, நாராயணபுரம் கூட்டு சாலை முதல் பொதட்டூர்பேட்டை வரையில் நேற்று சேதமடைந்த சாலையில் தார் கொட்டி சாலை பணியாளர்கள் சீரமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், அம்மாநில நெடுஞ்சாலையில், பொதட்டூர்பேட்டை, காஞ்சிபுரம் தெரு சாலை சந்திப்பில் புதிதாக வேகத்தடையும் அமைக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Tags : Pothatturpet ,Pallipattu ,Thirutani ,Pallipattu Sub-District Highway Department ,
× RELATED கேரளாவில் பேருந்து வீடியோவால் தீபக்...