ரெஜிநகர்: மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்டுவதற்கான பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. அயோத்தி பாபர் மசூதி பாணியிலான மசூதி பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம், பெல்தங்காவில், அயோத்தி பாபர் மசூதி பாணியில் புதிய மசூதி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த டிசம்பர் 6ம் தேதி நடந்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏ ஹுமாயூன் கபீர் இதற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி கட்டுமான பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.
இது குறித்து ஹூமாயுன் கபீர் கூறுகையில், ”கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும். இதற்கு ரூ. 55 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை எதிர்ப்பவர்களை ஒதுங்கி நிற்குமாறு கேட்டு கொள்கிறேன். மக்கள் தங்கள் சொந்த மதங்களைப் பின்பற்றவும், கோயில்கள், தேவாலயங்கள் அல்லது அவர்கள் விரும்பும் எதையும் கட்ட சுதந்திரம் உள்ளது. இஸ்லாத்தின் பெயரால் யாரையும் எதிர்க்க மாட்டேன்.என்னுடைய இறை உணர்வை வெளிப்படுத்துவதற்காக இதை செய்கிறேன். வேறு எதையும் திணிப்பதற்காக அல்ல’’ என்றார்.
