×

11 நிமிடமும், 11 எம்எல்ஏக்களும்… ஒய்.எஸ்.ஆர். காங்கிரசாரை கிண்டலடித்த சபாநாயகர்

திருமலை: ஆந்திர சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் அய்யன்னபத்ருடு தலைமையில் நேற்று தொடங்கியது. இதில் கவர்னர் அப்துல் நசீர் கலந்துகொண்டு உரையை வாசிக்க தொடங்கினார். அப்போது பட்ஜெட் உரையை கவர்னர் வாசிக்க தொடங்கியதில் இருந்து ஜெகன்மோகன் உள்ளிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 எம்எல்ஏக்கள் ஒரே நேரத்தில் எழுந்து திருப்பதி லட்டு பிரசாத விவகாரம் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து கோஷமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. பின்னர் ஒருகட்டத்தில் 11 பேரும் கூட்டம் தொடங்கிய 11வது நிமிடத்தில் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து சபாநாயகர் அய்யன்னபத்ருடு பேசுகையில், ` 11ம் தேதி, 11 எம்.எல்.ஏக்கள், 11 நிமிடங்களில் வெளியேறிவிட்டனர்’ என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குறித்து நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

Tags : Speaker ,Congress ,Tirumalai ,Andhra Pradesh Legislative Assembly ,Ayyannapathrudu ,Governor ,Abdul Nazeer ,YSR ,Jaganmohan… ,
× RELATED இலவச அமரர் ஊர்தி இல்லாததால் தந்தையின்...