×

பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கோவா பாஜ அமைச்சர் விடுதலை

பனாஜி: கோவா மாநில வருவாய் துறை அமைச்சராக இருக்கும் அட்னாசியோ மான்செராட்டே கடந்த 2016ம் ஆண்டு நேபாள சிறுமிக்கு போதை பொருளை கொடுத்து பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் மான்செராட்டே மற்றும் அவருக்கு நெருக்கமான ரோஸி பெராஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் நடந்த மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமி 16 வயதுக்கு மேல் உள்ளவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் மான்செராட்டே, மீது வழக்கு பதியப்பட்டது. பனாஜியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் மான்செராட்டே மற்றும் ரோஸி பெராஸ் ஆகியோரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி இர்ஷாத் ஆகா நேற்று தீர்ப்பளித்தார்.

Tags : Goa ,BJP ,minister ,Panaji ,Revenue Minister ,Athanasio Monserrate ,Monserrate ,
× RELATED இலவச அமரர் ஊர்தி இல்லாததால் தந்தையின்...