கண்மாயில் மூழ்கி முதியவர் பலி

 

பரமக்குடி,பிப்.11: பரமக்குடி அருகே பூவிளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு(85). இவர், அந்த கிராமத்திற்கு அருகில் உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி கண்மாய்க்குள் விழுந்துள்ளார். எழுந்திருக்க முடியாமல் மூழ்கி இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து இறந்த வேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: