திருமங்கலம் பகுதியில் விளைச்சலும், விலையும் இல்லாத மக்காச்சோளம்: விவசாயிகள் கடும் பாதிப்பு

 

திருமங்கலம், பிப். 11: திருமங்கலம் அருகே சித்திரெட்டிபட்டி, நாகையாபுரம், அம்மாபட்டி, பன்னிகுண்டு, காண்டை, வலையபட்டி, தங்களாசேரி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆண்டுதோறும் அதிக அளவிலான விவசாய நிலங்களில் மக்காசோளம் பயிரிடுவது வழக்கம்.
இந்தாண்டு பருவமழையை நம்பி சுற்று வட்டாரத்தினை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மக்காச்சோளம் பயிரிட்டனர். போதுமான மழை இல்லாமல் போனதாலும், பலத்த காற்று மற்றும் காட்டுப்பன்றிகள் பயிர்களை நாசம் செய்தததாலும் மக்காச்சோளம் பயிர்கள் கடும் சேதமடைந்தன.
இருப்பினும் விளைச்சல் கண்ட சோளப் பயிர்களை இயந்திரங்கள் உதவியுடன் விவசாயிகள் அறுவடை செய்து சுத்தப்படுத்தி மலைபோல் கிராமங்களில் குவித்து வைத்துள்ளனர்.

Related Stories: