மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான மெயின் தேர்வு தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான மெயின் தேர்வு தேதியை மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் -Iசி பணிகள்) தமிழ்நாடு பள்ளி கல்வி பணிகளில் அடங்கிய மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதன்மை தேர்வானது மார்ச் மாதம் 12ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த பதவிக்கான முதன்மை தேர்விற்கான தேர்வு தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி மார்ச் 22ம் தேதி முற்பகலில் முதல் தாள்- தமிழ்தகுதி தேர்வு (10ம் வகுப்பு தரம்) நடைபெறும். 23ம் தேதி முற்பகலில் தாள் 2- பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்), 24ம் தேதி முற்பகலில் தாள் 3- பொது அறிவு (பட்டப்படிப்பு தரம்), 25ம் தேதி முற்பகலில் தாள்4- கல்வியியல் (பட்டப்படிப்புத் தரம்) (சிபிடி முறை) தேர்வும் நடைபெறும். இந்த தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (ஹால்டிக்கெட்) தொடர்புடைய அனைத்து தேர்வர்களுக்கும் மார்ச் 12ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் வழக்கமான முறையில் ஓடிஆர் எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த தகவல்கள், அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (இமெயில்l), குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: