டெல்லி: சட்டமன்ற தேர்தலை ஒட்டி ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தங்களுடைய சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளையும் இடமாற்றம் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் நேரடியாக தொடர்புள்ள அதிகாரிகள் அனைவரையும் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மே.வங்க மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது
