சென்னை: சென்னை, கோவையில் தனியார் பங்களிப்புடன் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.பாதுகாப்பான செல்லப்பிராணி வளர்ப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முன்அனுபவம் உள்ள தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவம், வழிகாட்டு நெறிமுறைகளை tnawb.tn.gov.in-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம் விலாசத்திற்கு பிப்.26க்குள் அனுப்ப வேண்டும்.
