×

தமிழகத்தில் 13ம் தேதி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வரும் 13ம் தேதி தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, திண்டுக்கல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Tags : Delta districts ,Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,South Tamil Nadu ,Karaikal ,Chennai Meteorological Department… ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம்...