×

நிர்வாக காரணங்களுக்காக கூட்டுறவு வங்கி காலி பணியிடங்கள் குறைப்பு: மாநில ஆள் சேர்ப்பு நிலையம் தகவல்

சென்னை: நிர்வாக காரணங்களுக்காக கூட்டுறவு வங்கி காலிப்பணியிடங்கள் குறைக்கப்படுவதாக மாநில ஆள்சேர்ப்பு நிலையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் இயங்கும் தலைமை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பை மாநில ஆள்சேர்ப்பு நிலையம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, வெளியிடப்பட்ட அறிவிப்பில் மொத்தம் 327 பணியிடங்கள் நிரப்பப்பட இருந்தன. இந்நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக தற்போது இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் விளைவாக, மாநில ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் நிரப்பப்பட வேண்டிய மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 327-லிருந்து 267 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

Tags : State Recruitment Centre ,Chennai ,Registrar ,Cooperative Societies of Tamil ,Nadu… ,
× RELATED “அந்த ஆஃப்பாயில சொல்லல..’’ அமைச்சர் மா.சுப்பிரமணியன்