×

சென்னை அண்ணா நகரில் உள்ள முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் ஊரக மருத்துவ சேவை இயக்குநரக அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் ஊரக மருத்துவ சேவை இயக்குநரக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கிளை அமைப்பதாக கூறி திவ்யா என்பவரிடம் ரூ.30 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அனுமதியின்றியும் உரிய மருத்துவர்கள் இன்றியும் முடி மாற்று சிகிச்சை நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது. புகார் தொடர்பாக முடி மாற்று சிகிச்சை கிளினிக் மேலாளர்கள் உள்பட 15 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Directorate of Rural Medical Services ,Hair Transplant Clinic ,Anna Nagar, Chennai ,Chennai ,Divya ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம்...