×

ஜெயங்கொண்டம் அருகே கேல் ரத்னா உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள்

*புக் ஆப் ரெக்கார்டில் பதிவு

ஜெயங்கொண்டம் : ஜெயங்கொண்டம் அருகே கேல் ரத்னா உலக சாதனைக்காக ஒரே நேரத்தில் சிலம்பம் உள்ளிட்ட நான்கு விளையாட்டுப் போட்டிகளை 40 நிமிடத்தில் விளையாடி சாதனை படைத்த மாணவர்கள்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தழுதாழைமேடு தனியார் மெட்ரிக் பள்ளியில் கேர்ள் ரத்னா உலக சாதனை நிகழ்வுக்காக தமிழர் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிக்கான சிலம்பம் மற்றும் தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ் வேலா சங்க நிறுவனர் ஞான சரவணவேல் ராஜ், இந்திரா பப்ளிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் ஐயப்பன், அருள் வாக்கு சித்தர் கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் தஞ்சாவூர், திருச்சி அரியலூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று விளையாடினர்.

ஒரே நேரத்தில் சிலம்பம், கராத்தே, ஸ்கொய், யோகா ஆகிய போட்டிகளில் பங்கேற்று சுமார் 40 நிமிடம் வரை விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி உலக சாதனை படைத்து புக் ஆப் ரெக்கார்டில் பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்பு 30 நிமிடமே உலக சாதனையாக இருந்துள்ளது.

போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ் தமிழர் பாரம்பரிய சிலம்பம் மற்றும் தற்காப்பு கலை பயிலக குழுவினர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மாஸ்டர் மணி, ராஜேஷ், செல்வம், குமணன், செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Gale Ratna ,Jayangondam ,Silambam ,Jayangkondam ,DADHUTHALAIMEDU ,ARIYALUR ,
× RELATED சாடிவயல் யானைகள் முகாமிற்கு...