×

கோடைகாலம் துவங்குவதை முன்னிட்டு இளநீர் விற்பனை அதிகரிப்பு

*மக்கள் ஆர்வம்

கரூர் : கோடை காலம் துவங்குவதை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் இளநீர் விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது.ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை மூன்று மாதங்கள் கோடை காலமாக உள்ளது.

இந்த காலக்கட்டத்தில் உச்சபட்ச வெயில் வாட்டி வதைக்கும். இதனை சமாளிக்க பொதுமக்கள், இளநீர், தர்ப்பூசணி, கரும்புச்சாறு போன்ற பல்வேறு பானங்களை வாங்கி பருகி கோடையை சமாளித்து வருகின்றனர்.

அந்த வகையில் தர்ப்பூசணி பல்வேறு பகுதிகளில் தற்போது விற்பனைக்குவைக்கப்பட்டுள்ளன. இதே போல், கோவை சாலை, தாந்தோணிமலை, கரூர் மனோகரா கார்னர், மார்க்கெட் போன்ற பகுதிகளில் பொள்ளாட்சி போன்ற பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட இளநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரூ., 60ல் இருந்து 70 வரை இளநீரின் அளவுக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. கோடைக்கு உகந்த பானங்களில் இளநீர் மட்டுமே இயற்கை பானம் என்பதால் அனைத்து தரப்பினர்களும் இதனை ஆவலுடன் வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளனர். மேலும், கோடை உச்சத்தில் இருக்கும் சமயத்தில் இதன் விற்பனை மேலும் அதிகரிக்கும்.

Tags : Karur ,
× RELATED TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் பணியிட மாற்றம்!