×

கடமலை மயிலை ஒன்றியத்தில் ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு பயிற்சி

வருசநாடு : கடமலை மயிலை ஒன்றியத்தில், ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, குமணன்தொழு, வருசநாடு, வாலிப்பாறை, தும்மக்குண்டு, பாலூத்து, சிங்கராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு, அதன் உரிமையாளர்கள் ஓட்ட பயிற்சி அளித்து வருகின்றனர்.

மேலும் இங்குள்ள மாடுகளுக்கு மதிய நேரங்களில் நீச்சல் பயிற்சியும், காலை மாலை இரண்டு வேளைகளில் மாடுகளுக்கு பருத்திப்பால், மூலிகைபால், பேரிச்சைபழம், வடிகஞ்சி, வாழைப்பழம் சத்துமாவு உள்ளிட்ட அனைத்து வகையான உணவுகளையும் அளித்து வருகின்றனர்.

பங்குனி உத்திரம், சித்திரை திருவிழா உள்ளிட்ட திருவிழா காலங்களில் ரேக்ளா ரேஸ் பந்தயங்கள், கடமலை மயிலை ஒன்றியத்தில் நடப்பது வழக்கம். இதனையொட்டி இப்பகுதிகளில் ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இதனையறிந்து மாட்டு வியாபாரிகள் அதிகளவில் மாடுகள் வாங்குவதற்கு வருசநாடு பகுதிக்கு வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kadamalai Peacock Union ,
× RELATED TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் பணியிட மாற்றம்!