நாகர்கோவில் வடசேரியில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி சார்பில், அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டு பிரசுரம் விநியோக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., பேசுகையில், ‘‘இப்போது புதுசா ஒருத்தரு வந்து இருக்காரு. ஊழலை ஒழிப்பேன் என்கிறாரு. அவரு கூட இருப்பது யாரு செங்கோட்டையன். ஊழல் வழக்கில் கைதாகி 90 நாள் சிறையில் இருந்தவர். நான் தான் போய் பார்த்துட்டு வந்தேன். எல்லாம் நடிப்பு சார். நீ அரசியலுக்கு வரலாம். தப்பு இல்லை. கட்சி தொடங்கலாம். மக்களை சந்தித்து பேசு. தேவையில்லாததை பேசாதே.
இந்தியாவிலேயே ஒரு நடிகரை பார்க்க போய் 41 பேர் இறந்தாங்க. அதை கண்டு கொள்ளாமல் வீட்டுக்குள் போய் உட்கார்ந்து ெகாண்டாய். 41 பேர் மரணத்தை கண்டு கொள்ளாத கட்சி தவெக. இந்த கட்சியில் ஒருத்தர் இருக்காரு. ஆதவ் அர்ஜூனா. வாய்திறந்தா எல்லாம் ெபாய். அவரு பேச்சை கேட்டாலே சிரிப்பு, சிரிப்பா வருது. எங்க தலைவரை கைது செய்து பாரு என்கிறார். ஜெயலலிதா இருந்தா உங்க கதை என்ன ஆகி இருக்கும். இப்படித்தான் ராமதாஸ், 2002ல் இரவு 10 மணிக்கு பிறகும் பொதுக்கூட்டத்தில் பேசுவேன். என்னை கைது செய்து பார்க்கட்டும் என்றார்.
மறுநாளே சட்டமன்றத்துக்கு வந்த அப்போதைய முதலமைச்சர் ெஜயலலிதா, ராமதாஸ் ஆசைப்படி அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
எடப்பாடியும் தைரியமானவர். அதிமுக ஆட்சியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம், டெல்லிக்கு கோப்புகள் போனது. நாங்கள் தான் கொண்டு போறோம். அங்க அவுங்க ஒரு டிமாண்ட் வைக்கிறாங்க.
கவர்னரை போய் பாருங்க என்றனர். முதலமைச்சராக இருந்த எடப்பாடி கிட்ட கூறினோம். உடனடியாக பிரிவு 162 பயன்படுத்தி அரசாணை போட்டாரு. முதலமைச்சருக்கு இந்த பிரிவில் தனி பவர் இருக்கிறது. கவர்னர் ஒப்புதல் இல்லாமல் அரசாணை போட முடியும். கவர்னர் ஆபீஸ்ல இருந்து போன் 10 முறை அடிச்சாங்க. அவரு போனையே எடுக்கலை. இவ்வாறு அவர் பேசினார்.
