விஜய்லாம் ஒரு பொருட்டே இல்ல.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளாசல்

சென்னை: நடிகர் விஜய்யை ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற தனியார் கருத்தரங்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: என்.டி.ஏ கூட்டணிக்கு நான் தலைமை ஏற்பதில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கருத்துக் கணிப்புகளின் கணக்குகள் வேறு மாதிரி இருக்கலாம், மக்களுடைய கணக்கு வேறு மாதிரி இருக்கிறது. அதிமுக தலைமையிலான கூட்டணி 210 இடங்களில் வெல்லும், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களுக்கும் தினகரனுக்கும் மோதல் இல்லை. கருத்து வேறுபாடுதான், அது களையப்பட்டுவிட்டது. இணைந்து விட்டோம்.

விஜய் கட்சி இன்னும் ஒரு தேர்தலைக்கூட சந்திக்கவில்லை. ஒரு தேர்தலையாவது சந்தித்தால் தான், அவர்களுடைய வாக்குகளை கணிக்க முடியும். அப்போதுதான் மக்கள் செல்வாக்கு தெரியும். தவெகவினர் எம்ஜிஆர் பெயரைச் சொன்னால் தான் கட்சியே நடத்த முடியும். விஜய், திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார், அரசியலில்….? ஒரு தேர்தலை சந்தித்த பின்னர் தான் சொல்ல முடியும். நடிகர் விஜய் கூற்றை ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை. அப்புறம் எதற்கு பதில் சொல்ல வேண்டும்..? களத்தில் இறங்கினால்தான் யார் பலசாலி என்பதும், யாரை வீழ்த்த வேண்டும் என்பதும் தெரியும். விஜய் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. திரைப்பட நடிகர், அரசியல் கட்சி தொடங்கியிருக்கிறார். அவருக்கு ஆல் தி பெஸ்ட் எப்படிச் சொல்ல முடியும்..? போட்டிக்கு வந்த பின் எப்படி சொல்ல முடியும். தேர்தலில் சந்திப்போம். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

Related Stories: