மத்திய மண்டல ஐஜி பங்கேற்பு கடைவீதியில் சுற்றி திரிந்த இளம்பெண்ணை மீட்டு உறவினரிடம் ஒப்படைப்பு

புதுக்கோட்டை, பிப். 3: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2020ம் ஆண்டில் காணாம போன குழந்தைகள் தொடர்பாக 71 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 10 ஆண் குழந்தைகள் மற்றும் 54 பெண் குழந்தைகள் என 64 பேர் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன ஆலங்குடி, வம்பன்காலனியை சேர்ந்த குமாரவேலு என்பவரை நாகாலாந்தில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். காணாமல் போனவர்களை சிறப்பு முகாம் மற்றும் அதை முன்னெடுக்கும் வகையில் “புன்னகையைத்தேடி” என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாடு போலீசார் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்தார். அதற்காக ஏற்படுத்தப்பட்ட போலீஸ் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தை ஒருங்கிணைக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் அதிகாரிகளும் இதற்கென தனியாக போலீஸ் வாகனம் மூலம் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. மேலும் கரூர் மாவட்ட கடைவீதியில் ஆதரவற்ற பெண் ஜெபசெல்வி (18) என்பவர் மனநலம் பாதித்த நிலையில் சுற்றி திரிந்துள்ளார். அவரை கந்தவர்வகோட்டை அரியாணிபட்டியில் அமைந்துள்ள தென்னார்வ தொண்டு அமைப்பு மூலம் மீட்டு 5 மாதம் பராமரித்து சிகிச்சை அளித்து குணமடைந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில், அந்த பெண்ணின் பாட்டியிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: