×

அய்யோ… வட போச்சே? அறிவிக்கப்பட்ட வேட்பாளர் கனவு கலைந்தது!

எடப்பாடி பழனிசாமியையும், அதிமுகவையையும் எதிர்த்து அமமுக என்ற கட்சியை தொடங்கினார் டி.டி.வி.தினகரன். கட்சி தொடங்கிய அவர், பொதுச்செயலாளராக இருந்தார். அவருக்கு ஆதரவாக அதிமுகவில் அதிருப்தியில் இருந்த பலரும் இணைந்தனர். 2026 தேர்தலை கருத்தில் கொண்டு பலரும், கட்சிக்காக பணம் செலவு செய்து வந்தனர். தேர்தலில் போட்டியிட எப்படியும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், சற்றும் எதிர்பாராதவிதமாக டி.டி.வி.தினகரன், அதிமுக கூட்டணியில் இணைந்து விட்டார்.

இது, அமமுக தொண்டர்கள் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பூருக்கு வந்த டி.டி.வி.தினகரன், திருப்பூர் தெற்கு தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அதிகாரப்பூர்வமாக திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளராக மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மாநகராட்சி மேயருமான விசாலாட்சியை அறிவித்தார்.

இதனால், விசாலாட்சி தரப்பினரும், அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் டிடிவி அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தனக்கு எப்படியும் ‘சீட்’ கிடைக்காது என விசாலாட்சி அப்செட்டில் இருக்கிறார். வேட்பாளராக அறிவித்த 2 மாதத்தில் வேட்பாளர் கனவு கலைந்துவிட்டதே என விசாலாட்சி புலம்பி வருகிறார். ஆனாலும், எனது அரசியல் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, ஏற்கனவே அறிவித்தபடி தனக்கு சீட் பெற்றுத்தர வேண்டும் என டி.டி.வி.தினகரனை வலியுறுத்தி வருகிறாராம்.

Tags : North Boche ,Edappadi ,Amuka ,Palanisamy ,Adamuwa ,D. V. DINAKARAN ,secretary general ,2026 election ,
× RELATED தமிழக சட்டப்பேரவையில் பிப்.17ல்...