மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான்: திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

 

விருதுநகர்: மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் கல்லுக்குறிச்சி கலைஞர் திடலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தென் மண்டலத்திற்கு உட்பட்ட 20 கழக மாவட்டங்கள் மற்றும் 58 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.; தென்னிந்தியாவின் இரும்பு மனிதர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உழைப்புக்கு உதாரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.

இளைஞர் கூட்டத்தை பார்க்கும் போது வெற்றி நமதே என்பதை உறுதி செய்யக் கூடிய மாநாடு; பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் முதலமைச்சர் ஸ்டாலினுடன்தான் இருக்கிறார்கள். யாரோடு இருந்தால் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கும் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கூட கொடுக்க மாட்டேன் என்று கூறும் துரோக கூட்டணி நமக்கு எதிராக உள்ளது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நிதி கொடுக்க மாட்டேன் என்று கூறும் துரோக கூட்டணியோடு அதிமுக கைகோர்த்துள்ளது. உத்திரப்பிரதேசம், மராட்டியம், குஜராத்துக்கு அள்ளிக்கொடுக்கும் பாஜக, தமிழ்நாட்டுக்கு கிள்ளிகூட கொடுப்பதில்லை.

துரோகத்தோடுதான் கைகோர்த்து ஒரு கூட்டணி நமக்கு எதிராக இருக்கிறது. இந்தியை ஏற்றால்கொண்டால்தான் நிதி கொடுப்போம் என்று கல்வி நிதியை பாஜக அரசு நிறுத்தி வைத்துள்ளது. 100 நாள் வேலை திட்ட பெயரை மட்டும் மாற்றவில்லை பாஜக, அத்திட்டத்தையே ஒழிக்கும் செயலை பாஜக செய்துள்ளது. அராஜக கூட்டத்தோடு அதிமுக கைகோர்த்துள்ளது. அமெரிக்கா உமியை கொடுத்துவிட்டு இந்தியாவின் வளத்தை ஊதி ஊதிச் சாப்பிட போகிறது. நாடாளுமன்ற வரலாற்றிலேயே பிரதமரின் உரையின்றி ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம். பாஜக அரசின் அராஜக ஆட்சியின் கீழ் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்று கூறினார்.

Related Stories: