ராஜபாளையத்தில் அரசு கொள்முதல் நிலையம் இல்லாததால் சாலையோரம் நெல்லை கொட்டி விற்பனை விலை குறைவாக போவதால் கவலை

ராஜபாளையம், பிப். 3:  ராஜபாளையம், சேத்தூர், தேவதானம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது தொடர்மழை காரணமாக வயல்களில் மழைநீர் தேங்கியதால் நெற்பயிர்கள் அழுகி நாசமானதால் இழப்பீடு கேட்டு போராடி வருகின்றனர். தற்போது மழைக்கு தப்பிய ஒரு சில இடங்களில் நெல் அறுவடை செய்து வருகின்றனர். ஆனால் நெல்களை சேமித்து வைக்க களம் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் மூட்டைகளாக கட்டி வைத்துள்ளனர். மேலும் இப்பகுதியில் அரசு கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘அரசு கொள்முதல் செய்தால் ஒரு குவிண்டாலுக்கு ரூ.1300 வரை விலை கிடைக்கும். ஆனால் அரசு கொள்முதல் நிலையம் அமைக்காததால் தனியாரிடம் ரூ.1100க்கு விற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. கையில் பணம் இல்லாத காரணத்தினால் கிடக்கும் விலைக்கு விற்பனை செய்து வருகிறோம். எனவே தமிழக அரசு உடனடியாக இப்பகுதியில் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: