×

மகேந்திரவாடி அரசு பள்ளி சார்பில் ‘மஞ்சப் பை’ பயன்படுத்த விழிப்புணர்வு பேரணி

*ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

காவேரிப்பாக்கம் : மகேந்திரவாடி அரசு பள்ளி சார்பில் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை திட்டம், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் வாயிலாக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் ஒரு விழிப்புணர்வு இயக்கமாகும்.

இதைத்தொடர்ந்து 2024ம் ஆண்டு இத்திட்டம், பிளாஸ்டிக் மாற்றுகளை ஊக்குவிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு ‘‘மஞ்சப்பை விருது’’ வழங்கப்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்குவதன் மூலம், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது தவிர்க்கப்படுகிறது.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி ஊராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், வார சந்தை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம், மஞ்சப்பை பயன்படுத்துவதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் பார்த்திபன் தலைமை தாங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து வார சந்தையில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம், மஞ்சப்பை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேரணியாக சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மஞ்சப் பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது ஆசிரியர்கள், ஏராளாமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Tags : Mahendrawadi Government School ,manjab bag ,Kaveripakkam ,Tamil Nadu ,Chief Minister of ,Tamil ,Nadu ,
× RELATED திண்டுக்கல் அருகே கொசவப்பட்டியில்...