×

நிலக்கோட்டை அருகே 20 மாட்டுவண்டிகளில் 200 சீர்வரிசை பொருள்

*கலை நிகழ்ச்சிகளுடன் அசத்தல்

நிலக்கோட்டை : நிலக்கோட்டை அருகே 200 மாட்டுவண்டிகளில் 200 சீர்வரிசை பொருட்களுடன் சீர் செய்த விவகாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கொங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார்-மாலியபுரம் தம்பதி.

விவசாயிகள். இவர்களது 2 குழந்தைகளுக்கு நேற்று முன்தினம் காதணி விழா நடைபெற்றது. இதில் மாலியபுரத்தின் சகோதரர் வேல்முருகன், 200க்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருட்களை, இ.காமாட்சிபுரத்திலிருந்து இ.கொங்கப்பட்டி கிராமத்திற்கு 20 மாட்டுவண்டிகளுடன் கொண்டு வந்து அசத்தினார்.

அதில், இரட்டை சீர் என சொல்லக்கூடிய பித்தளை பானை, அண்டா, பித்தளை குடங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் இரட்டை எண்ணிக்கையில் சீராகவும், உப்பு, மிளகாய், மஞ்சள், இரட்டை மாலை, இனிப்பு, கார வகைகள் என அனைத்தும் பாரம்பரியம் மாறாமல் தனது அக்காள் பிள்ளைகளுக்கு சீர்வரிசையாக கொண்டு வந்து கிராமத்தில் காதணி விழாவை நடத்தினார்.

மேலும், பாரம்பரியத்தை மறக்காமல் தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு கலைகளுடன், தாரை தப்பட்டை வாண வேடிக்கை சகிதம் ஆட்டுக்கிடாய், வெள்ளி பாத்திரங்களுடன் காதணி விழா நடந்தது. இதனை கண்டு கிராம மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

Tags : Senthilkumar ,Maliapuram ,Kongabati ,Nilakkot, Dindigul district ,
× RELATED மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை...