×

திமுகவின் திட்டங்களை அதிமுக ஜெராக்ஸ் எடுத்துள்ளது : அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

விருதுநகர் : திமுகவின் திட்டங்களை அதிமுக ஜெராக்ஸ் எடுத்துள்ளது என்று அதிமுக தேர்தல் அறிக்கை குறித்த கேள்விக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். விருதுநகரில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழக இடைக்கால பட்ஜெட், அதிமுக, திமுக தேர்தல் அறிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய தங்கம் தென்னரசு,” திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கான குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவானது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். அனைவரும் கொண்டாடும் விதமாக திமுகவின் தேர்தல் அறிக்கை இருக்கும். இடைக்கால பட்ஜெட் பற்றிய ரகசியங்களை இவ்வாறு பொது வெளியில் பேசக்கூடாது.

பட்ஜெட் குறித்தான அறிவிப்புக்கு பொறுத்து இருங்கள். தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் பட்ஜெட்டில் இடம்பெறும். திமுக அறிவித்துள்ள திட்டங்களை தான் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் ஜெராக்ஸ் எடுத்துள்ளது. திமுகவின் நடைமுறையில் இருக்கும் திட்டங்களை அப்படியே காப்பி அடித்து விட்டீர்கள் என்று கட்சி சாராதவர்கள் கூட விமர்சித்து வருகிறார்கள். அதிமுகவால் சொல்ல மட்டுமே முடியும். திமுக தான் அதனை செய்யும். மகளிர் உரிமை தொகையை கொடுக்க முடியாது என்று மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் என்று விமர்சித்து இருந்தார். அதனையும் நாங்கள் செய்து காட்டினோம். அறிவிக்கப்பட்ட திட்டத்தை விட, கூடுதலாகவே நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : DIMUKA ,DIMUKA XEROX ,MINISTER ,GOLD THENARASU ,Virudhunagar ,Finance Minister Gold South Narasu ,Adimuka Xerox ,Tamil ,Nadu ,Finance Minister ,Thangam Thenrarasu ,Tamil Nadu Interim Budget ,Adimuka ,
× RELATED விருதுநகரில் நாளை நடைபெறும் இளைஞரணி...