புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கு எதையும் தெரிவிக்காமல் மோடி அரசு, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. 3 முக்கிய கேள்விகள் உட்பட பலவற்றுக்கு பதிலளிக்கப்படவில்லை. அமெரிக்க அழுத்தத்தால் இந்தியா எந்த விதத்திலும் சமரசம் செய்ததா? அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 0 சதவீத வரி என அதிபர் ட்ரம்ப் கூறுகிறார்.
இதற்கு நாம் ஒப்பு கொண்டோமா? நமது விவசாயிகள் பாதுகாப்பாக இருப்பார்களா? அமெரிக்க வேளாண் சந்தைக்கு, நமது வேளாண் துறையை நாம் திறந்து விட்டுள்ளோமா? ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துமா? இது தொடர்பாக ரஷ்யாவிடம் இந்தியா என்ன கூறியது? இவற்றுக்கான பதிலை அறிய நாடாளுமன்றத்துக்கும், 140 கோடி மக்களுக்கும் உரிமை உள்ளது.
