டெல்லி: GCC அமைப்பு நாடுகளுடன் தடையில்லா வர்த்தகத்தை ஏற்படுத்த பேச்சுவார்த்தைகளை தொடங்கியது இந்தியா. பேச்சுவார்த்தையின் முதற்கட்டமாக, FTA ஒப்பந்தத்திற்கான நிபந்தனை ஆவணத்தில் (Terms of Reference) இருதரப்பும் இன்று கையெழுத்திட்டன. இதன் மூலம் சவூதி அரேபியா, UAE, கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் ஆகிய 6 நாடுகளுடனான வர்த்தக உறவு புதிய மைல்கல்லை எட்டும்.
இந்தியா மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) இறுதி நடவடிக்கை குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளன. இந்த ஒப்பந்தம் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத், ஓமன் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வர்த்தகம் மற்றும் முதலீடுகளை கணிசமாக அதிகரிக்கும். GCC உடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) பேச்சுவார்த்தை, சரக்கு மற்றும் சேவை வர்த்தகத்தில் இறக்குமதி வரிகளைக் குறைப்பது அல்லது நீக்குவது.
இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (BIT) மற்றும் FTA பேச்சுவார்த்தைகள் தனித்தனியாக நடத்தப்பட்டு, செயல்முறை விரைவுபடுத்தப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் இந்தியா-GCC வர்த்தகம் சுமார் ($178.56) பில்லியனை எட்டியுள்ளது, இது ஒரு முக்கிய பொருளாதார கூட்டாண்மை. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்துடன் (UAE) ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, ஓமானுடனும் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் மேம்பட்ட நிலையில் உள்ளன
