தாளவாடி அருகே சாலையில் சிறுத்தை நடமாட்டம்

சத்தியமங்கலம்,  பிப். 3:   தாளவாடி அருகே சாலையில் நடமாடிய சிறுத்தையை வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.    சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி  மலைப்பகுதியை நோக்கி 4 பேர் காரில் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர். கார்  கும்டாபுரம் அருகே வனப்பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது,  வனப்பகுதி சாலையோரம் ஒரு சிறுத்தை நின்று கொண்டிருந்ததை காரில்  சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை  பார்த்த சிறுத்தை மெதுவாக சாலைக்கு வந்து சிறிது தூரம் ஓடி வனப்பகுதிக்குள்  சென்று மறைந்தது.அப்போது காரில், இருந்த  நபர்கள் தங்களது செல்போனில் சிறுத்தை நடமாட்டத்தை வீடியோ எடுத்து  வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது  சிறுத்தை சாலையில் நடமாடிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: