மும்பை விமான நிலையத்தில் நேற்று இரவு 2 விமானங்களின் இறக்கைகளின் முனைகள் மோதின

மும்பை: மும்பை விமான நிலையத்தில் 2 விமானங்களின் இறக்கைகள் ஒன்றோடு ஒன்று மோதியது. நேற்றிரவு மும்பையில் இருந்து புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானமும், மும்பைக்கு வந்திறங்கிய இண்டிகோ விமானமும் ஒன்றோடு ஒன்று உரசியதில் இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தது. பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.

இதையடுத்து, இரண்டு விமானங்களும் ஆய்வுக்காக மீண்டும் நிறுத்துமிடத்திற்குத் திரும்பின என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா விமானம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூருக்குப் புறப்படுவதற்காகத் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோதும், இண்டிகோ விமானம் ஹைதராபாத்தில் இருந்து வந்து தரையிறங்கிய பின், இரண்டு விமானங்களின் இறக்கைகளின் முனைகளும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதனால் இரண்டு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தது.

அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். விமானம் நிறுத்தப்பட்ட பிறகு அவர்கள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். விமானத்தில் பராமரிப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானம் மேலதிக தொழில்நுட்பச் சோதனைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: