×

விஜய்க்கு ஆதவ் அர்ஜுனா வீட்டில் வைத்த விருந்து தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி புறக்கணிப்பு ஏன்?

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சி முடிவடைந்ததும் கட்சியின் தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகளுக்கு ஆதவ் அர்ஜுனா தனது இல்லத்தில் விருந்து அளித்தார். இந்த விருந்தில் விஜய், புஸ்ஸி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்ட நிலையில், தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி கலந்துகொள்ளவில்லை.

ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமிக்கு இடையே மோதல் நிலவுவதாக கூறப்படுகிறது. மேலும் ஜான் ஆரோக்கியசாமி தவெகவின் வியூக வகுப்பாளராக உள்ளதால், தான் சொல்வதன் அடிப்படையில் தான் அனைவரும் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். குறிப்பாக ஆதவ் அர்ஜுனா மேடைகளில் பேசுவது, செயல்படுவது ஆகியவை தனது வியூகத்தின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என்றும், ஆதவ் அர்ஜுனா நடத்தி வரும் வாய்ஸ் ஆப் காமன் என்ற தொழில்நுட்ப அணியும் தனது கட்டுப்பாட்டில் தான் செயல்பட வேண்டும் என்றும் சொல்லியுள்ளதாக தெரிகிறது.

இதை ஏற்காத ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமியுடன் சண்டையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நந்தனத்தில் உள்ள வாய்ஸ் ஆப் காமன் அலுவலகத்தில் கட்சிப் பணிகளுக்காக இயங்கி வந்த ஜான் ஆரோக்கிய சாமியின் அலுவலகம் அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு இடையிலான சண்டையை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என தெரியாமல் கட்சியின் தலைவர் விஜய் திணறி வருகின்றனர்.

Tags : John Arookisami ,Aadav Arjuna ,Vijay ,Chennai ,Tamil Nadu Victory Club ,3rd Annual Inauguration Ceremony ,Daveka Head Office ,Banaiur ,Adav Arjuna ,
× RELATED எம்பிக்கள் 8 பேர் சஸ்பெண்ட் ஒன்றிய பா.ஜ....