×

தரமணியில் கொலை செய்யப்பட்ட பீகார் தம்பதி உடல்களை சொந்த ஊர் கொண்டு செல்ல நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தரமணி அருகே கொலை செய்யப்பட்ட பீகார் தம்பதியரின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பீகார் மாநிலத்திலிருந்து வேலை தேடி சென்னைக்கு வந்த தம்பதியர் கவுரவ்குமார், அவரது மனைவி புனிதாகுமாரி மற்றும் அவரது 2 வயது குழந்தை ஆகியோர் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் சென்னை மாநகர காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட்ட மூவரது உடல்களையும் அவர்களது சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல உதவி தேவைப்படுகிறது என்ற செய்தியை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் எவ்வித கட்டணமுமின்றி, அவர்களது உடல்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Bihar ,Taramani ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED அரிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக...