×

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தவுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை: முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ரூ.98 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர ஒன்றிய அரசு அனுமதி பெறுவதில் ஏற்பட்ட காலதாமதத்துக்கான காரணத்தை கூறி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக பொதுத்துறை செயலாளர், விஜிலென்ஸ் ஆணையர், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர், விஜிலென்ஸ் ஆணையர் மணிவாசன், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அபய்குமார் சிங் ஆகியோர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு ஒன்றிய அரசிடம் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட காலதாமதம் வேண்டுமென்றே ஏற்பட்டதல்ல என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், வழக்கு தொடர ஒப்புதல் கோரி அனுப்பிய கடிதம் ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளது.

எந்த அதிகாரியையும் பாதுகாக்கவில்லை. அவர்கள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

 

Tags : IAS ,EU government ,Velumani ,Chennai ,Government of Tamil Nadu ,High Court ,
× RELATED அரிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக...