×

முடிச்சு விட்டீங்க போங்க; விஜய் இன்ஜினில் ஆயிலே இல்லை: சொல்ல போனா வண்டியே இல்லைங்க: அண்ணாமலை பதிலடி

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தவெக 3ம் ஆண்டு விழாவில பேசுகையில், “நான் ஓவர் நம்பிக்கையில் பேசுகிறேன் என்று நினைக்காதீங்க. கள நிலவரம், கள யதார்த்தமும் இதுதான். தீயசக்தியை வீழ்த்துவதற்கு தூய சக்தியான நம்மால் தான் முடியும். 2026 தேர்தலில் மக்களுக்கு ஒரே ஆப்ஷன் தவெக தான். இந்த டப்பா இன்ஜின், ஓட்டை இன்ஜின், எவ்வளவு இன்ஜின் வந்தாலும், டாப் இன்ஜின் நம்ம தவெக தான் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

இதனை மனதில் வைத்து கொண்டு கட்சியினர் வேலை செய்ய வேண்டும்” என்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், ‘‘தவெக தலைவர் விஜய்யை பொறுத்தவரை, அவரிடம் இன்ஜின் இருப்பதாக தெரியவில்லை. எங்களிடம் டபுள் இன்ஜின் இருக்கிறது. அவரது இன்ஜினில் ஆயில் இல்லை, வண்டி இல்லை, சேஸ் இல்லை, பெட்ரோல் இல்லை, டீசல் இல்லை, அதை ஸ்டார்ட் செய்வதற்கு ஆட்கள் இல்லை.

இவர்கள் பாஜவை பார்த்து டப்பா இன்ஜின் என்று கூறுகிறார்கள். விஜய் பேசும் போது மக்கள் கைதட்ட வேண்டும், விசில் அடிக்க வேண்டும், ஆரவாரம் செய்ய வேண்டும் என்பதற்காக பேசுகிறார். மக்களை சந்திக்க விஜய் முயல வேண்டும், விஜய் பேசும் போது மக்கள் சிந்திக்கும் அளவிற்கு எதுவும் இல்லை என்று தான் நான் பார்க்கிறேன்” என்றார்.

Tags : Vijay ,Annamalai ,Tamil Nadu Victory Club ,Vijay Daveka ,
× RELATED எம்பிக்கள் 8 பேர் சஸ்பெண்ட் ஒன்றிய பா.ஜ....