நாட்டின் பாதுகாப்பு பற்றி பேசுவது அதிமுக்கியமானது என்று நான் கருதுகிறேன்: ராகுல்காந்தி

டெல்லி: நாட்டின் பாதுகாப்பு பற்றி பேசுவது அதிமுக்கியமானது என்று நான் கருதுகிறேன். தேசப் பாதுகாப்பு குறித்து நான் பேசுவது பிரதமர், பாதுகாப்பு அமைச்சருகு சங்கடத்தை ஏற்படுத்துகிறது; பிரதமருக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் சங்கடம் இல்லை என்றால் என்னை பேச அனுமதித்திருக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி கூறியதாவது;
சீன அத்துமீறலின்போது ராணுவ தளபதி நரவானே பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசியுள்ளார். பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் ஆகியோர் நரவானேயிடம் என்ன பேசினர் என்பது நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும்.

இக்கட்டான நேரத்தில் ராணுவத்துக்கு வழிகாட்ட வேண்டியது நாட்டை ஆள்பவரின் கடமை. ஆனால், பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் ஆகியோர் ராணுவத்துக்கு வழிகாட்டும் கடமையிலிருந்து தவறிவிட்டனர். இந்தியாவின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்ததா என்பதெல்லாம் அடுத்த விஷயம். தேசிய பாதுகாப்பு தொடர்பான 2 வரிகளைக் கூட பேச என்னை அனுமதிக்கவில்லை என கூறினார்.

Related Stories: