துபாய்: டி20 உலக கோப்பையில் இந்தியாவை புறக்கணிக்கும் முடிவு பாகிஸ்தான் அணிக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், பாகிஸ்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிகள் வரும் பிப்ரவரி 7ம் தேதி தொடங்கவுள்ளது. உலக கோப்பை போட்டிகள் இந்தியா, இலங்கை நாடுகளில் நடைபெற உள்ளன.
இதற்கிடையே, வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச வீரர் வெளியேற்றப்பட்ட விவகாரத்தால், டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து வங்கதேசம் அணி நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது.
இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட அணியுடன் மட்டும் விளையாட மாட்டோம் என்று கூறுவது விளையாட்டின் நேர்மை மற்றும் சமத்துவத்திற்கு எதிரானது. டி20 உலக கோப்பையில் இந்தியாவை புறக்கணிக்கும் முடிவு பாகிஸ்தான் அணிக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், பாகிஸ்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
