×

இளம் இந்தியாவிடம் பாக். படுதோல்வி

புலவயோ: ஜிம்பாப்வேயின் புலவயோ நகரில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இளம் அணியினர் மோதும் யு-19 உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் இளம் இந்தியா-இளம் பாக். அணிகள் மோதின.

முதலில் ஆடிய இந்தியா 49.5 ஓவரில் 252 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. பின்னர் ஆடிய பாக். அணி 46.2 ஓவரில் 194 ரன் எடுத்து சுருண்டது. இதனால், இளம் இந்தியா 58 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் கிலான் படேல், ஆயுஷ் மாத்ரே தலா 3 விக்கெட் எடுத்தனர்.

 

Tags : Pak ,India ,Bulawayo ,U-19 World Cup One ,Day Cricket ,Bulawayo, Zimbabwe ,
× RELATED 2026 டி20 உலகக்கோப்பை: இந்தியாவிற்கு...