×

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை நலம் விசாரித்தார் முதல்வர்

சென்னை: பாஜ மூத்த தலைவர் எச். ராஜா பக்கவாத பாதிப்பால் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், நேற்று எச்.ராஜா அனுமதிக்கப்பட்டு உள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தனர்.

எச்.ராஜாவின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த அவர்கள், தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்துகளை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, அதே மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். உடன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருந்தார்.

Tags : Chief Minister ,H. Raja ,Chennai ,BJP ,Apollo Hospital ,Ayaar Vilukku Creams Road, Chennai ,Tamil Nadu ,M.K. Stalin ,Deputy ,Udhayanidhi Stalin ,
× RELATED மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வில்...