×

ஒன்றிய பட்ஜெட் வளர்ச்சியை மையமாக வைத்துள்ளது: இந்திய தொழில் கூட்டமைப்பு சொல்கிறது

சென்னை: ஒன்றிய அரசின் 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட் வளர்ச்சியை மையமாக வைத்துள்ளதாக இந்திய தொழில் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. சென்னை, கிண்டியில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஒன்றிய பட்ஜெட் தொடர்பான தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். அப்போது பேசிய சிஐஐ அமைப்பின் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் கூறியதாவது;

வளர்ச்சியை மையமாக வைத்து பட்ஜெட்டை நிதியமைச்சர் அறிவித்துள்ளார். 3-4 வருடங்களாக உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. விரைவு ரயில் வழித்தடம், நீர்வழித்தடம், விமானப் போக்குவரத்து ஆகியவை சுற்றுலாவை மேம்படுத்தும், வேலைவாய்ப்பை அதிகரிக்கும். சிறு தொழில் நிறுவனங்கள் வளர பத்தாயிரம் கோடி வளர்ச்சி நிதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஐ டேட்டா சென்டர்களுக்கான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் முன்னேற்றம் மற்றும் உற்பத்தி தொழில்கள் பெண்களின் பங்களிப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளதென தெரிவித்தார். தொடர்ந்து பேசிய டாபே நிறுவனத்தைச் சேர்ந்த சந்திரமோகன் கூறியதாவது; தேங்காய், வால்நட், முந்திரி உள்ளிட்ட விவசாய பொருட்களின் சந்தைப்படுத்தல் குறித்து இந்த பட்ஜெட்டில் இருந்தது. இது எப்படி விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று பார்க்க வேண்டும். கடந்த பட்ஜெட்டில் விவசாயத்தில் அதிகமாக அறிவிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் அது அடுத்த 4 ஆண்டுகளுக்கானது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஏற்கனவே செய்ததைத்தான் செய்யப்போகிறார்களா என தெரியவில்லை. கடந்த ஆண்டு சிறப்பாக நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்தாண்டு பட்ஜெட்டில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளதா எனப் பார்க்க வேண்டும். இந்த முறை ஏஐ மற்றும் குறிப்பிடத்தக்க பொருட்கள் உற்பத்தி என்பது விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என நினைப்பதாக தெரிவித்தார்.

Tags : EU ,Federation of Indian Industry ,Chennai ,EU government ,Confederation of Indian Industry ,CII ,Kindi, Chennai ,
× RELATED மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வில்...